நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது படத்தில் மஞ்சுவை நடிக்க வைக்க திலீப்பிடம் பேசினார்.
அதற்கு திலீப் அளித்த பதில் பலரையும் வியக்க வைத்தது.
மஞ்சுவை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பிய பிரியதர்ஷனிடம் தீலிப் கூறியதாவது, என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது.
அவர் நடிக்க மாட்டார் என்றார்.
திலீப்பை திருமணம் செய்த பிறகு காவ்யா மாதவன் புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு கூட வருவது இல்லை.
மஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவை மட்டும் விடவா போகிறார் என்று கேரள ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள்.
காவ்யா இனி நடிக்க மாட்டார் என மல்லுவுட்டில் கூறப்படுகிறது.
நிஷால் சந்திராவை திருமணம் செய்யவிருந்தபோது காவ்யா அளித்த பேட்டியில் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார்.
அதனால் அவர் தற்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
திலீப் தனது மகள் மீனாக்ஷியை, காவ்யா கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார்.
பொதுவாக, கேரள நடிகர்கள் கூட இவ்வாறு தங்களது ஆணதிகாரத்தைக் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், கேரளாவில், பெண்ணதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.