தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் படத்தின் மூலம் பலரால் கண்டறியப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை அனு இம்மானுவேல். மலையாள, தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சிக்காக்கோ நடிகையாக கலக்கியவர்.
இதையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் காந்த கண்ணழகி என்று பெயர் பெற்று பிரபலமானார். சமுகவலைத்தளங்களில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷின் 6 வது படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டது.
காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்பதால் நடிகர் அல்லு சிரிஷுடன் நெருக்கமாக முத்தமிட்டபடியும், படுக்கையில் இணைந்து படுத்தபடியும் இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.