இந்தியாவிற்குரிய நாட்டாட்சி எல்லையை லடாக்கில் சீனாவிடம் இழந்தோம். தற்போது நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே சீன முகாம்களாகியுள்ளதாக இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் வலிமையான பிரதமரின் கீழ் இவை அனைத்தும் நடந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் குறிப்பிட்டுள்ளதாவது, பெரும்பான்மை மக்கள் செல்வாக்குடனான வலிமையான பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்.
ஆனால் இந்த காலப்பகுதயில் இந்திய – சீன எல்லைகளில் பல்வேறு முறுகல் நிலை ஏற்பட்டது. குறிப்பாக லடாக்கில் எமது எல்லையை இழக்கும் நிலை ஏற்பட்டது.
மறுப்புறம் இந்தியாவின் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ள நேபாளம் போன்ற நாடுகள் மற்றும் இலங்கை போன்ற அண்டைய நாடுகளில் சீனா மிக வேகமாக காலூன்றிவருகின்றது.
அதிலும் இலங்கை – நேபாளம் சீனாவின் முகாம்களாகவே உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.