Loading...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் செயற்குழு இன்று கூடிய போதே, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Loading...
இதன்படி, ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடும் ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதேவேளை ரணில் விக்ரமசிங்கவே நாடாளுமன்றம் செல்வார் என முன்னதாக வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...