இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட குறித்த தடை உத்தரவு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்தார்.
எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.