இலங்கையில் முன்னணியில் இருக்கும் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வலைத்தளங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் ராஜபக்ஷர்கள் முயற்சித்து வருகின்றனர் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், நாள் ஒன்றுக்கு 35,000 மற்றும் 50,000 தினசரி வாசகர்களைக் கொண்ட உள்ளூர் வலைத்தளங்களையே கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு கொள்வனவு செய்ய உள்ள பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வலைத்தளம் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றும் குறித்த வலைத்தளத்தின் முகப்புத்தக விருப்பங்கள்(likes) 7 இலட்சங்கள் அளவில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
67 மில்லியன் செலவில் இந்த ஒப்பந்தம் வெளிநாட்டில் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷர்கள், தங்களது அரசியல் செய்திகளை பொது மக்களுக்கு விரைவில் அனுப்புவற்காகவே பிரபலமான வலைத்தளங்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் முகப்புத்தக பாவனைக்கு அரசாங்கம் தடை விதிக்குமானால், தங்களது அரசியல் செய்திகளை பொது மக்களுக்கு பறிமாற்றிக் கொள்ள வழியில்லாமல் போய்விடும் என்பதாலேயே ராஜபக்ஷர்கள் இந்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளனர் என குறித்த கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.