ஜியோனி தனது ‘M’ தொடரில் புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனை மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் நைஜீரியாவில் கேமிங் சார்ந்த மீடியா டெக் செயலியுடன் M15 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 48MP குவாட்-கேமரா அமைப்பு, வேகமான சார்ஜிங் ஆதரவு உடனான பேட்டரி மற்றும் FHD+ டிஸ்ப்ளே போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.
ஜியோனி M15: முழு விவரங்கள்
ஜியோனி M15 IPC LCD டிஸ்ப்ளேவுடன் நிரம்பியுள்ளது, இது 6.67” அளவிலானது. இந்த சாதனம் 1080 x 2400 பிக்சல்கள் FHD+ தெளிவுத்திறனை ஆதரிக்கிறது மற்றும் நிலையான 60Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இது செல்ஃபி கேமராவிற்கென மையமாக சீரமைக்கப்பட்ட பஞ்ச்-ஹோல் உள்ளது.
கேமரா அமைப்பை பொறுத்தவரையில், கைபேசி 16MP செல்பி கேமரா கொண்டுள்ளது. பின்புறத்தில் செங்குத்து வடிவிலான குவாட்-லென்ஸ் கேமரா தொகுதி 48MP முதன்மை சென்சார் மற்றும் 5MP அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார் உடன் உள்ளது. இந்த அமைப்பில் முறையே ஆழம் மற்றும் மேக்ரோ சென்சார்களாக 2MP சென்சார்கள் செயல்படும்.
ஜியோனி M15 அதன் ஆற்றலை ஹீலியோ G90 செயலியில் இருந்து பெறுகிறது, இது மாலி-G76 GPU மற்றும் 8 ஜிபி RAM உடன் உள்ளது. கைபேசி 128 ஜிபி வரை சேமிப்பு திறன் கொண்டது, இது மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி மேலும் விரிவாக்க முடியும்.
இணைப்பைப் பொறுத்தவரை, ஜியோனி M15 4ஜி LTE, இரட்டை சிம் ஆதரவு, வைஃபை, புளூடூத் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் ஆகியவற்றை வழங்குகிறது. கைபேசியில் பாதுகாப்புக்காக பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் உள்ளது. கைபேசி 5,100 mAh பேட்டரி யூனிட் உடன் இயங்குகிறது. 18W விரைவான சார்ஜிங்கிற்கான ஆதரவும் இதில் உள்ளது.
ஜியோனி M15 விலை மற்றும் விற்பனை விவரங்கள்
ஜியோனி M15 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக NGN 90,800 (தோராயமாக ரூ.16,000) ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் நைஜீரியாவில் NGN 106,200 (தோராயமாக ரூ.18,000) விலையில் விற்பனை செய்யப்படும்.