தமிழகத்தில் சில ஆண்டுகளாகவே துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விட்டது. காவல்துறையினரையும் வெடிகுண்டு வீசி கொலை செய்யும் அளவிற்கு ரவுடிகளின் அட்டகாசம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.
இந்த வகையில், தேனாம்பேட்டை சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி மீது 8 கொலை வழக்கு மற்றும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. தி.நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்த குற்ற வழக்குகளில் சிக்கி போலீசார் மத்தியில் சிடி மணி என்ற பெயர் உருவானது. திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல தாதா ஒருவருடன் இதற்கு பழக்கம் ஏற்பட அவர் மறைவுக்கு பிறகு சிடி மணி தலைமையில் புதிய டீம் உருவானது.
கொலை வழக்குகள், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளில் இவர் ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி, சிடி மணியை கொள்ள முயற்சி நடந்தது. அதில் ஜான்சன், கம்ரூதின், பிரசாந்த், ராஜசேகர் ஆகியோர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் தேனாம்பேட்டையில் பைக்கில் வந்து சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகிய இரு ரவுடிகள் மீது வெடிகுண்டு வீசியவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். சென்னை தனிப்படை காவல்துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சிடி மணியை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.