Loading...
மக்கள் திருட்டுத் தனமாக மாநிலம் கடப்பதைத் தடுப்பதற்காக, குவா மூசாங், தானா பூத்தே பகுதியில், குறுக்குப் பாதையில் போலீஸ் தோண்டியிருந்த குழிகள், மீண்டும் மண்ணைக் கொண்டு மூடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குவா மூசாங் – குவாலா லிப்பிஸ் சாலையில் போலீஸ் ஏற்படுத்தியிருக்கும் சாலை தடுப்பிலிருந்து தப்பிக்க, மக்கள் சம்பந்தப்பட்ட குறுக்குப் பாதையைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
அதையடுத்து அந்த குறுக்குப் பாதையில் 6 குழிகளைத் தோண்டியதோடு, கான்கிரீட் தடுப்பையும் போலீசார் போட்டிருந்தனர்.
Loading...
பொறுப்பற்ற தரப்பால் மூடப்பட்ட அந்த குழிகள் மீண்டும் தோண்டப்படுமெனவும் குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் சிக் ஜூன் ஃபூ தெரிவித்தார்.
Loading...