பிரிட்டனில் கொரோனா தொற்று 3வது அலை பரவ தொடங்கியுள்ளதாக இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் கொரோனாவின் தாக்கத்தால் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
கடந்த 5 நாட்களாக 3000க்கும் அதிகமாக தொற்று காணப்படுவதாகவும் அனைத்து அலைகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பரவலைத் தொடங்குகிறது எனவும் இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸால் கொரோனா இரண்டாவது அலை கடும் தாக்கத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியநிலையில், தற்போது மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளது என்ற தகவல் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.