ஜெயலலிதா முதல்முறையா 91-ல் முதலமைச்சர் ஆவதற்கு முன்பாகவே உயில் எழுதும் முயற்சியில் இருந்தார். அப்போது அவருக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த மூத்த வழக்கறிஞர் கே.எஸ். மூலமாக உயிலைத் தயார் செய்ததாகத் தகவல் உண்டு. அதன்பிறகு சொத்துக்குவிப்பு, அதற்கான வழக்கெல்லாம் பெரிதானதை அடுத்து இன்னொருவர் மூலமாக ரகசியமான உயிர் ஒன்றை எழுதி, நம்பகமான ஆடிட்டரிடம் கொடுத்துவைத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித்தீர்ப்புக்குப் பிறகுதான் அந்த உயிலின் அம்சங்கள் வெளியாகவேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பம். உயில் வெளியே வந்தால், சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள சொத்துபத்து களைத் தாண்டி, ஜெ.வுக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றன எனும் உண்மை வெளிப்படும்.
பிரதமர் மோடிக்கும் இந்த ஆடிட்டர் நெருக்கமானவர் என்பது முக்கியமானது.