பெற்ற தந்தை ஒருவர் தனது 13 வயது மகளை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி நகர்ப்புறப் பகுதியில் கட்டடத் தொழிலாளி ஒருவர் கடந்த சில மாதங்களாக தனது 13 வயது மகளுக்கு வன்கொடுமை தொல்லை கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த அச்சிறுமியின் தாய், தனது கணவரை கண்டித்ததுடன் மகளை கூட்டிக்கொண்டு இரண்டு மாதமாகத் தனியே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கட்டடத் தொழிலாளி மீண்டும் அவரது மனைவிக்கும் மகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.
குறித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டபோது, கட்டடத் தொழிலாளி அவரது மகளை வன்புணர்வு செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கட்டடத் தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.