தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்பின் உறுப்பினராக த்ரிஷா இருப்பதால், அவரும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படுகிறார் எனக்கூறி கண்டனங்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கோபம் அடைந்தது த்ரிஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவங்களால் மனம் உடைந்த த்ரிஷா, நான் பிறப்பால் ஒரு தமிழ்பெண், ஒருபோதும் தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ள மாட்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இயக்குநர் சண்முகம் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழர்கள் ஒருபோதும் உன்னிடம் கெஞ்சமாட்டார்கள். நீ தமிழகத்தை விட்டு வெளியேறு. நீ ஒரு குடிகார குரங்கு என விமர்சித்துள்ளார்.