இலங்கையில் சில நிறுவனங்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதால் பயண தடையை நீடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பயண கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் சில நிறுவனங்கள் இலாபம் பெறும் நோக்கில் மிகவும் மோசமான முறையில் செயற்படுவதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை நீடித்தால் எதிர்வரும் நாட்களில் நாட்டை திறக்க முடியாத நிலைமை ஏற்படும். இதற்கு பொது மக்கள், அரச, தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் பொறுப்பு கூற வேண்டும்.
சில தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு ஊழியர்களை பணிக்கு அழைத்து அவர்களிடம் இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்த நிலைமை எதிர்வரும் நாட்களிலும் நீடித்தால் நாட்டை திறக்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலைமையில் செயற்படுவதனால் ஏனைய மக்கள் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் நிறுவனங்களை நடத்தி செல்பவர்கள் அவசியமான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதே முறையில் செயற்பட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு போதும் குறைவடையாது, தினசரி ஏற்படும் கோவிட் மரணங்களின் எண்ணக்கையும் அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.