மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை சென்னை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, சேகர்பாபு, உதயிநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.