புலானய்வு துறையினரால் இளைஞன் ஒருவர் அடித்து கொலைக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மட்டுவில் சம்பவம் மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்று இரவு 10.30 மணியளவில் புலனாய்வுத் துறையினரினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 21 வயது மதிக்கத்தக்க சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகாவலின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
தனது மகனை நேற்று இரவு கைது செய்து மாஞ்சி போட்டு அடித்து சித்திரவாதை செய்து கொலை செய்யபப்ட்டுள்ளதாக உயிரிழந்தவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்து வருகை தந்த மாவட்ட நீதவான் நீதிபதி கருப்பையா செல்வராணி சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரை விசாரணை நடத்த பணித்துள்ளதுடன் சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலை பிரேத கூற்று பரிசோதனை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.