கொரோனா ஊரடங்கு காலத்தில் குடும்பத்தினரின் மனம் கவரும் வகையில் இனிப்பான கோதுமை மாவு ஸ்நாக்ஸ் தயாரிக்கும் வழிமுறைகள் இதோ…
கோதுமை மில்க் கேக் தேவையான பொருட்கள்
தயிர் – கால் கப்
நெய் – 2 டீஸ்பூன்
கோதுமை மாவு – 1 கப்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பாகு தயாரிக்க..
சர்க்கரை – முக்கால் கப்
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/4 கப்
செய்முறை
சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் பயன்படுத்தலாம்.
பிசைந்த மாவை சப்பாத்தி கல்லில் இட்டு அடர்த்தியாக தேய்க்கவும்.
பின்னர் அதை சிறு சதுர வடிவ துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சதுர வடிவ மாவுத் துண்டுகளை இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குலோப் ஜாமுன் செய்யும் பாகு போன்றே அதை தயாரிக்கவும்.
மிதமான சூட்டில் பொரித்த கோதுமை கேக்கை பாகில் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். ஜீரா முழுவதையும் மாவு உறிஞ்சிய பின்னர் சாப்பிடுவதற்கு சுவையான கோதுமை மில்க் கேக் தயார்.