பொகவந்தலாவ – கொட்டியாகலை கிழ் பிரிவு தோட்டப்பகுதியில் கற்பாறையோடு மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடியிருப்புகளில் பின்னால் இருந்த கற்பாறை ஒன்று மண்மேடோடு சரிந்துள்ளமையினால் குடியிருப்புகளில் இருந்த எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு குடியிருப்புகளில் உள்ளவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.