மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய ஆக்சிஜன் கிடைக்காத போது தான் மனிதன் இறக்கிறான். தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது. கொரோனா வைரஸ் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளை தாக்குவதால், உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதால் தான், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை சீரான அளவில் பராமரிக்க, அதற்கு உதவும் உணவுகளை அன்றாடம் உட்கொள்வது நல்லது.ஒருவரது உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாத போது, படபடப்பு, குழப்பம், தலைச்சுற்றல், மூச்சு விடுவதில் சிரமம், தலையில் அழுத்தம் அல்லது தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உங்கள் உடலில் ஆக்சிஜன் சீரான அளவில் இருக்க வேண்டுமானால், பின்வரும் சில எளிய உணவுப் பொருட்களை உங்களின் தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் ஓ.ஆர்.ஏ.சி (Oxygen Radical Absorbance Capacity) மதிப்பு அதிகமாக உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
ஓ.ஆர்.ஏ.சி உணவுகள்
ஒருவரது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளை ஓ.ஆர்.ஏ.சி மதிப்புக்களைக் கொண்டு கூறுவார்கள். ஓ.ஆர்.ஏ.சி என்பது ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி ஆகும். இந்த ஓ.ஆர்.ஏ.சி உணவுகளை அன்றாடம் ஒருவர் சாப்பிடும் போது, உடலில ஆக்சிஜன் அளவை சரியாக நிர்வகிக்க முடியும். இப்போது ஓ.ஆர்.ஏ.சி மதிப்பு அதிகம் உள்ள உணவுகளின் பட்டியலைக் காண்போம்.
மஞ்சள்
மஞ்சளில் சுமார் 2,700 ஓ.ஆர்.ஏ.சி உள்ளது. எனவே அன்றாட உணவில் மஞ்சள் தூளை சேர்த்துக் கொண்டால், உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதைத் தடுக்கலாம். வேண்டுமானால் மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீர் அல்லது டீயுடன் சேர்த்துக் குடிக்கலாம். இல்லாவிட்டால், பாலில் மஞ்சள் தூளை சேர்த்துப் பருகலாம். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும்.
கிராம்பு
கிராம்பும் உடலில் ஆக்சிஜன் அளவைப் பெருக்க உதவும். 100 கிராம் கிராம்பில் 3 லட்சம் ஓ.ஆர்.ஏ.சி உள்ளது. ஆகவே கிராம்பை தினமும் ஒன்றை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இல்லாவிட்டால் அன்றாட சமையலிலும் சேர்த்துக் கொள்ளலம். ஆனால் கட்டாயம் ஒரு கிராம்பையாவது ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டும்.
துளசி
சளி பிடித்திருக்கும் போது துளசி சாப்பிடுவது நல்லது என்று சொல்வதை கேட்டிருப்போம். ஏனெனில் துளசியில் உள்ள மருத்துவ பண்புகள் சளியைப் போக்க மட்டுமின்றி, உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே தினமும் ஒரு பத்து துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.
பிற மசாலா பொருட்கள்
அன்றாட சமையலில் தாளிக்கும் போது நாம் சேர்க்கும் பெரும்பாலான மசாலாப் பொருட்களான பட்டை, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகிய அனைத்துப் பொருட்களுக்கும் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே இனிமேல் நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கறிவேப்பிலை, பூண்டு ஆகிய பொருட்களைத் தூக்கி எறியாமல், அவற்றையும் சாப்பிட பழகுங்கள்.
எலுமிச்சை
எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது தான். ஆனால் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க நினைத்தால், எலுமிச்சையை அப்படியே துண்டுகளாக்கி நீரில் போட்டு தோலுடன் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
பயறு வகைகள்
பயறு வகைகளான பச்சை பயறு, காராமணி, கொண்டைக்கடலை, சோயா, பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றில் லெகாமா குளோபின் என்ற கூட்டு வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் அடங்கிய உணவுகள் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். எனவே இவற்றை தினமும் சிறிது உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
இரும்புச்சத்துள்ள உணவுகள்
ஒருவரது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தாலும், ஆக்சிஜன் அளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே இரும்புச்சத்துள்ள உணவுகளான முருங்கைக்கீரை, பசலைக்கீரை, தர்பூசணி, பூட்ரூட், அன்னாசி, வேக வைத்த வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுங்கள். இந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.