Loading...
வேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் ‘கொலஸ்ட்ராரும் ஒன்று இன்று கொலஸ்ட்ரால் என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது.
உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்சினை. இது தொப்பை பிரச்சினை, அதிக உடற்பருமனுக்கு காரணமாக அமைகின்றது.
Loading...
இதனை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்.
அந்தவகையில் கொழுப்பை ஆரோக்கியமான முறையில் குறைக்க கூடிய உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- எல்.டி.எல் அளவை குறைக்க வைட்டமின் சி உதவுகின்றது. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுகளில் சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள், கோழி, காளான், டுனா மீன், பாதாம் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ளது.
- பூண்டு பற்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி விடவும். இதை சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். பூண்டு உரித்து நெருப்பில் சுட்டு சாப்பிடலாம். பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிடலாம். பூண்டு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். . இந்த கலவை இயற்கையாகவே உடலில் கொழுப்பை குறைக்க செய்யும்.
- ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து 1 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து இலேசாக கொதிக்க வைத்து இறக்கி விடவும். இளஞ்சூடாக இருக்கும் போது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். தினமும் மூன்று முறை வரை இதை செய்து குடிக்கலாம். இதில் இருக்கும் ஈ.ஜி.சி.ஜி இருப்பதால் இது கெட்ட கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது.
- தயிர் புரோபயாடிக் நிறைந்தது. தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இயற்கையாகவே கொழுப்பை குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளன.
- கொழுப்பின் அளவை குறைக்க சியா விதைகள் உதவக்கூடும். சியா விதைகள் – 1 டீஸ்பூன் அளவு. தினசரி சாலட், ஸ்மூத்தி வகைகள், பழச்சாறுகளில் சியா விதைகளை சேர்த்து உட்கொளுங்கள். கொழுப்பின் அளவை குறைக்க தினசரி சியா விதைகள் எடுத்துகொள்ளலாம்.
- ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் எடுத்து அதில் ஆளிவிதைகள் பொடியை சேர்த்து குடிக்கலாம். சுவைகு தேவையெனில் தேனை சேர்க்கலாம். நீருக்கு மாற்றாக பாலிலும் கலந்து குடிக்கலாம். இது இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது மேலும் கல்லீரல் நோய்கள் உருவாகும் அபாயத்தை குறைக்க செய்கிறது.
- கொழுப்பின் அளவை குறைக்க எலுமிச்சை சாறை 1 டம்ளர் வெது வெதுப்பான நீரில் தேவையான அளவு சேர்த்து தேன் கலந்து குடிக்க வேண்டும். தினமும் ஒரு டம்ளர் வீதம் குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்புகள் கரையக்கூடும்.
- வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து தேன் சேர்த்து கலக்கி குடிக்கலாம். தினமும் அல்லது வாரத்தில் மூன்று நாட்கள் இதை குடித்து வரலாம். தேவையற்ற உடல் எடையை குறைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பை ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் இருந்து வெளியேற்றக்கூடும்.
- செலரி தண்டுகள் அரைத்து அரைகப் தண்ணீரில் சேர்த்து அரைத்து சாறை தனியாக எடுத்து வடிகட்டி சிறிது தேன் சேர்க்கவும். இந்த சாற்றில் ஒரு டம்ளர் குடிக்கலாம். தினமும் 1 அல்லது 2 டம்ளர் வரை குடிக்கலாம்.
- வேகமாக குறைக்க ஓட்ஸ், பார்லி , முழு தானியங்கள், பீன்ஸ், அவகேடோ, பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை அல்லது பழுப்பு நிற கொட்டைகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேருங்கள்.
Loading...