வெள்ளையாக இருக்க வேண்டும் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதற்காக தினமும் கெமிக்கல் கலந்த கண்டகண்ட க்ரீம்களை நாம் பயன்படுத்தி கொண்டு தான் இருக்கின்றோம் அல்லவா?
ஆனால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நமது சருமத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு, இயற்கையில் உள்ளது சூப்பரான டிப்ஸ் இதோ!
முகத்தில் இருக்கும் அழுக்குகளை போக்க என்ன செய்ய வேண்டும்?
நமது அழகினை எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் பளிச்சென்று பொலிவடைய சூடான நீரில் ஆவி பிடிப்பது ஒரு மிகச் சிறந்த இயற்கை வழி ஆகும்.
ஏனெனில் நமது முகத்தின் சருமத்தில் இருக்கும் துகள்கள் விரிவடைந்து, அதில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றுகிறது.
மேலும் ஆவி பிடிக்கும் போது, நமது முகத்திற்கு தேவையான ரத்தோட்டம் சீராக இருப்பதால், நமது சருமம் எப்போதும் அழகாக புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
இதனால் நமக்கு இளமையில் ஏற்படும் முதுமையான தோற்றத்தை தடுத்து, முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற சருமம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல், எப்போதும் நமது சருமத்தை இளமையாக பாதுகாக்கிறது.
குறிப்பு
சூடான நீரில் ஆவி பிடிக்கும் போது, 10 நிமிடம் வரை இருக்க வேண்டும். அதன் பின் சுத்தமான துணியை வைத்து, முகத்தை நன்றாக துடைக்க வேண்டும்.