முன் நாள் அமெரிக்க அதிபர் டொனால் ரம்பின் பேஸ் புக் கணக்கில், அவரால் போஸ் எதனையும் போட முடியாது என்று பேஸ் புக் நிறுவனம் அறிவித்துள்ளது. டொனால் ரம், சமீபத்தில் அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தை தாக்கிய நபர்களை புகழ்ந்து தள்ளி ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து பல மில்லியன் முறைப்பாடுகள் பேஸ் புக் நிறுவனத்திற்கு சென்றது. இதனை தொடர்ந்து அன் நிறுவனம் டொனால் ரம் கணக்கை முடக்கியது. அவரால் 2023 வரை…
எந்த ஒரு போஸ்டையும் போட முடியாதாவது பேஸ் புக் நிறுவனம் செய்துள்ளது. இதனை அவர்கள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படி எந்த ஒரு அரசியல்வாதியின் கணக்கையும் பேஸ் புக் நிறுவனம் முடக்கியது இல்லை. 7 நாட்கள் , 30 நாட்கள் இல்லையே 2 மாதம் என்றே முடக்குவது வழக்கம். ஆனால் டொனால் ரம் விடையத்தில் பேஸ் புக் நிறுவனம் மிகவும் கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.