ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, ஹைப்பர்சோனிக் விமானங்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் ஒரே மணி நேரத்தில் செல்ல மக்களுக்கு உதவ ஒரு விமான தொடக்க நிறுவனமானது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வீனஸ் ஏரோஸ்பேஸ் கார்ப் (Venus Aerospace Corp) அதன் ஹைப்பர்சோனிக் விண்வெளி விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து டோக்கியோவிற்கு ஒரு மணி நேரத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது. இதற்கு சாதாரணமாக விமானங்களில் செல்லவேண்டுமென்றால் 11 முதல் 13 மணி நேரம் வரை ஆகும்.
இந்த நிறுவனம் முன்னாள் விர்ஜின் ஆர்பிட் LLC நிறுவன ஊழியர்களான சாரா டகில்பி (code-writing வெளியீட்டு பொறியாளர்) மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ டகில்பி (ஏவுதல், பேலோட் மற்றும் உந்துவிசை செயல்பாடுகள்) ஆகியோரின் சிந்தனையால் உருவானது. சாராவின் பாட்டியின் 95 வது பிறந்த நாளை தொலைவின் காரணமாக இவர்கள் தவறவிட்டதால் இந்த யோசனை தோன்றியுள்ளது.
ஒலியின் வேகத்தை விட வேகமாக பயணிக்கும் ஜெட் விமானங்கள் சூப்பர்சோனிக் ஜெட் விமானங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இருப்பினும், வீனஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் உருவாக்க நோக்கம் என்னவென்றால் சூப்பர்சோனிக் விமானங்களை விட வேகமான ஹைபர்சோனிக் ஜெட் விமானங்கள் தான். வீனஸ் தனது விமானம் மூலம் மணிக்கு 9,000 மைல்கள் அல்லது ஒரு மணி நேரத்திற்கு 14,484 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல திட்டமிட்டுள்ளது. இது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட 12 மடங்கு வேகமானது.
தற்போது வீனஸ் நிறுவனத்தில் 15 ஊழியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் விண்வெளித் துறையைச் சேர்ந்த வீரர்கள். பிரைம் மூவர்ஸ் மற்றும் டிராப்பர் அசோசியேட்ஸ் போன்ற venture capital நிறுவனங்களிலிருந்து அவர்கள் முதலீட்டைப் பெற்றுள்ளனர்.
கடந்த காலத்தில் நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து தங்கள் தொழில்நுட்பம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும், அவை மிகவும் திறமையானவை என்றும், இறக்கைகள், லேண்டிங் கியர் மற்றும் இன்ஜின்களிலிருந்து கூடுதல் எடையை சிறப்பாக குறைத்து ஒரு வணிக விமானம் போல தோற்றமளிக்கு என்றும் தெரிவித்துள்ளனர். ஆண்ட்ரூ கூறுகிறார், “ஒவ்வொரு தசாப்தங்களிலும் மனிதர்கள் இதை முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த முறை இது கண்டிப்பாக வேலை செய்யும்.” என்று உறுதியோடு தெரிவித்துள்ளார்.