ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக சமூகவலைதளத்தில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
நடிகர் விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதாக பலர் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தான் அப்படி ஏதும் பேசவில்லை என்றும், தேவையில்லாமல் தனது பெயரை கூறி யாரோ தகவல் வெளியிட்டிருப்பதாகவும் மறுப்பு தெரிவித்து அவர் விளக்கம் அளித்தார்.
இருப்பினும் அவரை பலரும் தொடர்ந்து திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தான் அவர் டுவிட்டரில் இருந்து விலகினாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று தெரியவில்லை.
முன்னதாக த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படுவதாக பலரும் அவரை திட்டித் தீர்த்ததால் அவர் டுவிட்டரில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் அவரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.