பால் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதச்சத்துகள் கிடைக்கிறது.
ஆனால் எந்த நேரத்தில் பால் குடித்தால், நமது உடல் நலத்திற்கு நல்லது என்று உங்களுக்கு தெரியுமா?
எந்த நேரத்தில் பால் குடிப்பது நல்லது?
அன்றாடம் நாம் காலை மற்றும் இரவு நேரங்களில் பால் குடிப்பது மிகவும் நல்லது. ஆனால் ஆயுர்வேதத்தில் இரவு நேரத்தில் பால் குடிப்பது தான் மிகவும் நல்லது என்று கூறப்பட்டுள்ளது.
நாம் காலை வேளையில் பால் குடிப்பதால் அன்றைய நாளுக்கு தேவையான புரதச்சத்துக்கள் நமது உடலுக்கு முழுவதும் கிடைக்கிறது.
மேலும் உடலின் தசைகளை பில்ட் செய்பவர்கள் அதிகாலை வேளையில் பால் குடித்து விட்டு, இரவு உணவுக்கு பிறகு குடிப்பது சிறந்தது.
ஆனால் ஆயுர்வேதத்தின் முறைப்படி, இரவு தூங்குவதற்கு முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது, நம் மனதை அமைதியாக உணர வைப்பதுடன், நல்ல உறக்கம் பெறவும் உதவுகிறது என்று கூறுகின்றனர்.
குறிப்பு
இரவில் நேரத்தில் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் அதிகமாக பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் அவர்களுக்கு உடலில் கொழுப்புகளை அதிகரிக்கச் செய்வதுடன், சிலருக்கு செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.