பிரித்தானியாவில் 16 வயது சிறுமி ஒருவர் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதி ஒன்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அதிகாலை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் கவுண்டிப் பகுதியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் பொலிசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லியோனி என்றும், சமூக வலைதளத்தில் பழக்கமான ஒருவரை சந்திக்க சென்ற அவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 18 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இருப்பினும் லியோனி எப்படி இறந்தார் என்ற தெளிவான தகவல் கிடைக்காத நிலையில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும், சிறுமி மர்ம நபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.