பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி 3 தொடரில் நடித்துள்ள பிரபல சின்னத்திரை நடிகர் பியர்ல் வி புரி (pearl v puri) சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சினிமா மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்துள்ளதாகவும் , சில ஆண்டுகள் அவருடன் தொடர்பில் இருந்து விட்டு பின்னர், அவரை கழட்டி விட்டதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இச்சம்பவம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பியர்ல் வி புரி கைது செய்யப்பட்டது குறித்து ‘நாகினி 3’ பூரியுடன் நடித்த அனிதா ஹசானந்தனி அவருக்கு ஆதரவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “சில முட்டாள்தனமான செய்திகளுக்கு பதில் அளிக்கிறேன் பியர்ல் வி பூரியை எனக்கு நன்றாக தெரியும்! இது உண்மையல்ல … உண்மையாக இருக்க முடியாது …. எல்லாம் பொய்கள். விரைவில் உண்மை வெளிவரும். ஐ லவ் யூ பேர்ல் வி பூரி என தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.