Loading...
ஜேர்மனியில் அக்டோபருக்குப் பிறகு, முதன்முறையாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, கடந்த 7 நாட்களுக்கு 100,000 பேருக்கு 29.7 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முந்தைய நாள் நிலவரப்படி இது 34.1 ஆக இருந்தது என Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...
இதற்குமுன், கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் திகதிதான் 7 நாட்களுக்கு 100,000 பேருக்கு கணக்கிடப்படும் தொற்று வீதம் 29.6ஆக இருந்தது.
அதற்குப்பின்பு ஜேர்மனியில் இந்த எண்ணிக்கை இவ்வளவு குறைவாக பதிவாகியுள்ளது இப்போதுதான். இருந்தாலும், வியாழனன்று பொதுவிடுமுறையாக இருந்ததால், இந்த தொற்று அளவு குறைந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
Loading...