Loading...
எல்லோருமே மாசு, மரு அற்ற சருமம் வேண்டுமென்றே நினைப்பார்கள். ஆனால் வெயிலில் செல்வதால் கூட உங்கள் சருமம் கருமை அடையக் கூடும்.
சருமத்தின் நிறத்தை அதிகரிக்க இன்று எத்தனையோ கிறீம்கள் இருந்தாலும் இயற்கை வழிமுறைகளே சிறந்தது என்று கூறுவார்கள்.
Loading...
அந்தவகையில் சரும நிறத்தை அதிகரிக்க எந்தெந்த பொருள்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று இப்போது பார்க்கலாம்.
- கொண்டைக்கடலையை அரைத்து முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், வயது முதிர்ந்த தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தை அழகூட்டும்.
- தயிர் எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருள். இது ஏராளமான சருமப் பிரச்னைகளைத் தீர்க்கும். தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும் கரும்புள்ளிகளைப் போக்கவும் பயன்படுகிறது. புளியுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிய பின், சிறிதுநேரம் குளிரவைத்து முகத்தில் அப்ளை செய்யலாம்.
- புளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி3 சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்திருக்கும். சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.
- எலுமிச்சையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தரும்.எலுமிச்சை சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்யும். தேன் மிகச்சிறந்த ஆன்டி- பாக்டீரியலாகப் பயன்படுகிறது. இது வறண்ட, எண்ணெய் பசையுள்ள என எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது.
Loading...