Loading...
குடுவை வடிவத்தில் இருக்கும் சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
Loading...
எனவே சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கி ஒரு டம்ளர் நீர் விட்டு அரைத்து வடிகட்டி, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
தேன் கலந்த சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் அடையாமல் வயிறு தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த சுரைக்காய் ஜூஸை குடித்தால், எளிதில் ஜீரணிக்கும் சக்தி கிடைக்கும்.
- சுரைக்காய் ஜூஸ் அதிக நீர்ச்சத்து கொண்டதால், இதை உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் குடித்தால், அவர்களின் உடம்பில் உள்ள கொழுப்புகளைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால், விரைவில் உடல் எடை குறையும்.
- சிறுநீர் பாதை மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், கிருமிகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ருவதுடன், இதனால் ஏறபடும் சிறுநீரக தொற்றை தொடர்பான நோய்களைக் குணப்படுத்துகிறது.
- சுரைக்காய் மற்றும் தேன் இரண்டுமே ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டவை. மேலும் இவை ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை நமது உடம்பில் தூண்டச் செய்வதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
- தேன் கலந்த சுரைக்காய் ஜூஸில் நமக்கு தேவையான கால்சியம். இரும்புசத்து மற்றும் விட்டமின்கள் இருப்பதால், கர்ப்பிணி பெண்கள் இந்த ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அவர்களின் கருவின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
- நரம்புகளில் உண்டாகும் இறுக்கங்களை போக்கி, மன அழுத்தம் தொடர்பான ஹார்மோன்களின் சுரப்பை கட்டுப்படுத்தி, அதிகப்படியான மன அழுத்தம் பிரச்சனைகளில் இருந்து தடுக்கிறது.
- சுரைக்காய் நமது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைக் கொண்டது. எனவே இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்து, வயிற்றில் உண்டாகும் அல்சர் புண்கள் வராமல் தடுக்கிறது.
Loading...