கர்ப்பக் காலத்தில் பெண்கள் உடல் மற்றும் மனம் ரீதியாக பல விதமான நிறைய மாற்றங்களை உணர்வார்கள்.
இதுபோன்ற மாற்றங்கள் இயல்பாக இருந்தாலும், ஹார்மோன்கள் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும்.
கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்களின் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்களை எடுத்துக் கொள்ளும் போது, செரிமானம், குடல் இயக்கங்களிலும் மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்.
கர்ப்ப்பிணி பெண்களின் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்கள்
கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணி பெண்களின் உடலில் கர்ப்பம் சார்ந்த ஹார்மோன் அதிகரிப்பதால், வேறு சில சுரப்பிகளும் அதிகரிக்கும். இந்த சுரப்பிகள் அவர்களின் மார்பகத்தின் அளவை பெரியதாக மாற்றுகிறது.
இதனால் கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் தனது மார்பகத்தை சற்று பாரமாக உணர்வார்கள்.
கர்ப்பக் காலத்தில் பெண்களின் மார்பகம் பெரிதாக என்ன காரணம்?
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு மார்பக பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஹார்மோன்கள் மாற்றம் அடைந்து திசுக்கள் உப்பியது போல இருப்பதால், அவர்களின் மார்பகம் பாரமாக உணர்வதுடன் கொஞ்சம் வலி மிகுந்ததாகவும் உணர்கிறார்கள்.
மேலும் கர்ப்பிணி பெண்களின் மார்பக பகுதியில் நீல நிறத்தில் நரம்புகள் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் மார்பகத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்த ஓட்டம் ஆகும்.