Loading...
உறக்கம் நமது உடலுக்கு நாம் கொடுக்கும் ஒருவித ஓய்வு நிலையை குறிக்கிறது.
தினமும் 6- 8 மணிநேரம் சீரான உறக்கம் இருந்தாலே அடுத்தநாள் பொழுதில் மிக சிறப்பாக பணிகளை செய்ய முடியும்.
Loading...
ஆனால் நாம் செய்யும் ஒருசில செயல்களால் உறக்கம் இல்லாமல் தவிக்க நேரிடும்.
எனிவே தூங்கும் முன் இந்த செயல்களை ஒருபோதும் செய்துவிட வேண்டாம்.
தூங்கும் முன் செய்யக் கூடாத செயல்கள்
- உறங்குவதற்கு முன் கண்டிப்பாக சுடுநீர் மற்றும் ஷவரில் குளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் நமது உடம்பில் வியர்வை அதிகமாகி, மன அழுத்தம் ஏற்பட்டு நல்ல தூக்கமும் கெடுகிறது.
- நம் தினமும் தூங்குவதற்கு செல்லும் முன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஏனெனில் நமது உடல் சூடாகி அதிக வியர்வை சுரப்பதால், நம்முடைய ஆழ்ந்த தூக்கம் கெட்டுப் போகிறது.
- தூங்குவதற்கு முன் டிவி மற்றும் நெட் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் ஏனெனில் இதனால் நமக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படுவதுடன் தூக்கத்தின் நிலையும் கெட்டுப் போகிறது.
- இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் அதிக அளவில் காபின் நிறைந்த காபி மற்றும் மதுபானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் அதிக சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் ஏற்படுவதால், இரவு நேர தூக்கம் கெடுகிறது.
- இரவில் அதிக நேரம் கண் விழித்து வேலை பார்த்தால், மூளை தன்னுடைய ஓய்வு நிலையை இழந்து, நமது உறக்கம் நிரந்தரமாக தடைபட்டுவிடும்.
- திகில் கதைகள் மற்றும் படங்களை இரவில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது தொடர்பான கனவுகள் நமது நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கிறது.
- இரவில் நாம் தூங்கும் அறையில் செல்லப்பிராணிகளை கொஞ்சுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் செல்லப்பிராணிகளின் உடம்பில் இருக்கும் குட்டிப்பூச்சிகள் நமது உடம்பில் தொற்றி பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
Loading...