கிழக்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 132 பேரை கொன்று குவித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் உள்ள solhan கிராமத்திலே இக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என புர்கினா பாசோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Solhan மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது வீடுகளும் உள்ளூர் சந்தையும் எரிக்கப்பட்டன. தற்போது வரை எந்த போராளி குழுவும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதலால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐ,நா தலைவர் António Guterres கூறினார். இந்த கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.
வன்முறை தீவிரவாதம் மற்றும் அதானல் ஏற்படும் மனித உயிரிழப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக போராடும் ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச சமூகம் அளிக்கும் ஆதரவை இரட்டிப்பாக்க வேண்டிய அவசர தேவை இருப்பதாக António Guterres கூறினார்.
3 நாட்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்த புர்கினா ஜனாதிபதி Roch Kabore, தீய சக்திகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.