Loading...
முழு அடைப்பு காலத்தில், பூக்கடைகளைத் திறக்க அனுமதிக்கப்படாத நிலையில், வியாபாரிகள் குறிப்பாக, கேமரன் மலையில் உள்ள பூ வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் , ஆலய- இல்ல வழிபாடுகளுக்கு, மக்கள் பூக்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியிருப்பதாக, மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர். எஸ் மோகன் ஷான் தெரிவித்தார்.
இக்கால கடத்தில் ஆலயங்கள் திறக்கப்படாவிட்டாலும், காலை மாலை என இரு வேளைகளில் நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.
Loading...
மேலும், இறப்பு காரியங்களுக்கும் அதிகம் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆகவே, பூ விற்பனைக்கு அனுமதிக்கும்படி , மலேசிய இந்து சங்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருப்பதாக ஆர் எஸ் மோகன் ஷான் குறிப்பிட்டார்.
Loading...