சியோமி விரைவில் இந்தியாவில் Mi 11 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சமீபத்திய தகவலின்படி, இந்தியா டுடே நிறுவனம் கைபேசியின் 4 ஜி பதிப்பை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தெரிய வந்துள்ளது. அதோடு, Mi 11 லைட் 4ஜி மாடலின் விலை அடிப்படை மாடலுக்கு 25,000 ரூபாய்க்குள் இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது.
Mi 11 லைட் 4ஜி மெலிதான பெசல்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்ட பஞ்ச்-ஹோல் கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், இது மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.
இதன் திரை 6.55 அங்குல முழு-HD+ (1080×2400 பிக்சல்கள்) AMOLED பேனலை 20:9 என்ற திரை விகிதத்துடன் கொண்டிருக்கும். இது 90Hz புதுப்பிப்பு வீதத்தையும் HDR10 ஆதரவையும் கொண்டிருக்கும்.
கைபேசி தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP 53 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும்.
Mi 11 லைட் 4G இல் 64MP (f / 1.8) முதன்மை சென்சார், 8MP (f / 2.2) அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5MP (f / 2.4) மேக்ரோ ஷூட்டர் அடங்கிய மூன்று பின்புற கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். முன்பக்கத்தில், இது 16MP (f / 2.5) செல்பி கேமராவைக் கொண்டிருக்கும்.
சியோமியின் Mi 11 லைட் 4ஜி ஒரு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 732G சிப்செட்டிலிருந்து ஆற்றல் பெறும், இது 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில், இது ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான MIUI 12 இல் இயங்குகிறது மற்றும் 4,250mAh பேட்டரியை 33W வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடன் கிடைக்கும்.
இணைப்பிற்காக, சாதனம் டூயல்-பேன்ட் வைஃபை, புளூடூத் 5.1, GPS மற்றும் டைப்-C போர்ட் ஆகியவற்றிற்கான ஆதரவைக் கொண்டிருக்கும்.
இந்தியாவில், Mi 11 லைட் 4ஜி போனின் அடிப்படை மாடலுக்கான விலை 25,000 ரூபாய்க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் வெளியீட்டு நேரத்தில் அறிவிக்கப்படும், இது இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.