ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி போன் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய 5ஜி மாடல் விவரங்கள் ஜூன் 24 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜியோ 5ஜி மாடல் 2021 தீபாவளி வாக்கில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். எனினும், இதன் வெளியீடு குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.
தற்போதைய தகவல்களின் படி ஜியோ 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அதாவது அக்டோபர் – நவம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது. புது மாடல் வெளியீடு பற்றி இரு நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
புது 5ஜி மாடல் விலை 50 டாலர்களுக்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 3500 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.