வைகாசி மாதம் என்பது முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஒரு மாதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இம்மாதத்தில் வருகின்ற வைகாசி கிருத்திகை தினம் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய மிகவும் சிறப்பான ஒரு தினமாகும்.
முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக சிறந்த மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும்.
முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் ய்வீட்டில் முருகன் படத்திற்கு நைவேத்தியம் படைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.
வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி, சிவப்பு ரோஜா போன்ற மலர்களை சமர்ப்பித்து தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
மேற்கண்ட முறையில் முருகனை வைகாசி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு முடித்ததும், அருகிலுள்ள முருகன் கோயிலுக்கும் சென்று வழிபடுவது சிறப்பு. மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கும், வசதியற்ற ஏழை மக்களுக்கும் தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் உங்களுக்கு ஏற்படுகின்றது.