Loading...
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இரண்டாம் நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.உணவு தவிர்ப்புப் போராட்டதில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட 36வது அணியும் போராட்டதில் ஈடுபட்டுள்ளது.
Loading...
நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதாவது நடைமுறை பிரசினைகள் தீர்கப்படும்வரை தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் உள்வாங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும், இலங்கை மருத்துவ சபை எதுவித அரசியல் தலையீடுகளும் இன்றி செயற்பட வேண்டும், இதுவரைகாலமும் தனியார் மருத்துவ கல்லூரியில் கல்விபயின்ற மாணவர்களுக்கு பொருத்தமான தீர்வு வழங்கப்பட வேண்டும், தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிவில் பெர்ணான்டோ மருத்துவமனைகள் அரச மயமாக்கப்பட வேண்டும் என்ற நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading...