சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று உலக பொருளாதார மாநாட்டின் தொடக்க நிகழ்வுக்கு முன்னதாக சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.
இச்சந்திப்பின்போது சீனாவின் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக அம்பாந்தோட்டைத் துறைமுகம், கைத்தொழில் முதலீட்டு வலயம், கொழும்பு நிதி நகரத் திட்டம் என்பவை தொடர்பாகவும் இதனால் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்கால முதலீடுகள் தொடர்பாகவும் சீன அதிபருடன் பேசப்பட்டதாக பிரதமர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 3000 தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் அனைவரையும் சிறீலங்கா பிரதமர் சந்தித்துப் பேச்சு நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.