Loading...
பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் கருவளையம், (dark circles) இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது.
குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.
Loading...
இந்த கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அந்தவகையில் தற்போது கருவளையத்தை போக்க கூடிய சில எளிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- உருளைக்கிழங்கை அரைத்து அவற்றில் இருக்கும் சாறினை தனியாக வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்து கொள்ளவும். அந்த துணியை அந்த சாற்றில் நனைத்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
- எலுமிச்சை மற்றும் தக்காளி இவை இரண்டும் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு இயற்கை பொருளாகும். எனவே இவற்றின் சாறை ஒன்றாக கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
- தக்காளி ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சிறிது புதினா மற்றும் உப்பை சேர்த்து கலந்து குடித்து வந்தால், கருவளையங்கள் நாளடைவில் நீங்கிவிடும்.
- பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.
- ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.
- தினமும் படுக்கும் முன்பு, வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்த க்ரீம்களை தடவி வந்தால், கருவளையம் போய்விடும்.
- இரவு தூங்கும் முன்பு இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் கருவளையம்மறைந்து விடும்.
- சிறிது புதினா இலையை பேஸ்ட் செய்து , அதனை கண்களைச் சுற்றி தடவி வந்தால், கண்களில் இருக்கும் களைப்பு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். கண்களில் கருவளையம் வருவதற்கு கண்கள் களைப்புடன் இருப்பதும் ஒரு காரணம். ஆகவே இந்த முறை கண்களை புத்துணர்ச்சியாக்கும்.
- துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறைந்து போகும்.
- சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
- கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.
Loading...