iQOO பிராண்ட் இந்தியாவில் iQOO Z3 5G எனும் புதிய ஸ்மார்ட்போனை 5ஜி வசதியோடு அறிமுகப்படுத்தியுள்ளது. 120 Hz புதுப்பிப்பு வீத டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 768G சிப்செட், டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 55W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4400 mAh பேட்டரி ஆகியவற்றுடன் இந்த தொலைபேசி கிடைக்கும். ஸ்னாப்டிராகன் 768G SoC உடன் இயங்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இதுதான்.
iQOO Z3 5G ஸ்மார்ட்போன் 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களின் விலைகள் முறையே ரூ.19,990, ரூ.20,990 மற்றும் ரூ.22,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏஸ் பிளாக் மற்றும் சைபர் ப்ளூ வண்ணங்களில் வருகிறது.
iQOO Z3 5G அமேசான் மற்றும் iQOO.com தளங்களில் ஜூன் 8 ஆம் தேதி 1PM முதல் கிடைக்கிறது.
iQOO Z3 5G விவரக்குறிப்புகள்
IQOO Z3 5G 6.58 அங்குல முழு HD+ டிஸ்ப்ளேவுடன் 1080 x 2408 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் 20:9 திரை விகிதம், 180 Hz தொடுதல் மாதிரி விகிதம், 120 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR 10+ ஆதரவுடன் ஏற்றப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 768G செயலி மற்றும் 8 ஜிபி வரை RAM உடன் இயக்கப்படுகிறது. IQoo Z3 256GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இது 64 மெகாபிக்சல் சாம்சங் ISOCELL GW 3 சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, மற்றும் பின் பேனலில் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவற்றுடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, iQoo Z3 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சாரை முன்பக்கத்தில் கொண்டுள்ளது.
IQOO Z3 5G 4400mAh பேட்டரியுடன் 55W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது, இது தொலைபேசியை 19 நிமிடங்களில் 50% வரையும் மற்றும் ஒரு மணி நேரத்திற்குள் 100% வரையும் சார்ஜ் செய்ய முடியும். பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் முக அங்கீகார ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
iQoo Z3 ஆனது ஆன்ட்ராய்டு 11 இல் OriginOS உடன் iQoo 1.0 க்கு மேல் இயங்குகிறது. இணைப்பு முன்னணியில், இது 5ஜி SA / NSA, இரட்டை 4ஜி VoLTE, WiFi 802.11 ac (2.4 GHz + 5 GHz), புளூடூத் 5.1, GPS / GLONASS, யூ.எஸ்.பி டைப்-C மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது.
சாதனம் மென்மையான கேமிங் அனுபவத்தை வழங்க “ஐந்து அடுக்கு திரவ குளிரூட்டும்” (five-layer liquid cooling) அமைப்புடன் வருகிறது, இது வெப்பநிலையை 10 டிகிரி வரை குறைக்கிறது. இது 4D ஹாப்டிக் பின்னூட்ட அமைப்புடன் வருகிறது.