Loading...
சிவப்பு திராட்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்றவை உள்ளன.
ஃப்ளவனாய்டுகள் திராட்சைகளில் காணப்படும் மிக சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
Loading...
அது கண்களின் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்ய கூடியவை. இந்த சிவப்பு திராட்சை உடல் ஆரோக்கியத்துக்கு செய்யும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
- சிவப்பு திராட்சை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது. அதனால் அது பல தொற்று நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க செய்யும்.
- யூரிக் அமிலத்தை குறைக்க சிவப்பு திராட்சை பயனுள்ளதாக இருக்கும்.
- யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது அது முதலில் சிறுநீரகத்தில் தான் பாதிப்பை உண்டாக்கும்.
- சிறுநீரக கல், சிறுநீரக பற்றாக்குறை. சிறுநீர் வடிகட்டுதலில் குறைபாடு போன்றவை உண்டாகும்.
- கண் கோளாறு, கண்களில் புரைவிழுவது போன்ற பிரச்சனைகளை தடுக்க சிவப்பு திராட்சையில் உள்ள ஃப்ளவனாய்டுகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
- இது கண் புரை தடுத்து ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து போராடக்கூடும்.
- இவை அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இரத்த உறைவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறக்க செய்கின்றன.
- மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருந்தால் முளையின் வேலை சுறுசுறுப்பாக இருக்கும். சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் மூளைக்கு 200% இரத்த ஓட்டத்தை அளித்திட செய்யும்.
- இது மூளை வேகமாக வேலை செய்யும் திறனையும் விரைவுப்படுத்துகிறது.
- சிவப்பு திராட்சை வெளிப்புற தோலில் காணப்படும் சபோனின்களை கொண்டுள்ளது.
- இது கொழுப்பை குறைக்க செய்கிறது மற்றும் இரத்தத்தில் கொழுப்பு உறிஞ்சுவதை தடுக்கிறது.
- இது உடல் பருமன் மற்றும் இதய நோய்களை தடுக்க செய்கிறது.
Loading...