இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர் பிராட் பந்தில் 6 சிக்ஸர் அடித்த பின் என்ன நடந்தது என்பது குறித்து கூறியுள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி, கோப்பையைக் கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங் தான்,
இவர் அப்போது நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டிகளில் பல சாதனைகளை படைத்தார். அதில், ஒன்று தான், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், ஸ்டுவர் பிராட் ஓவரில் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்தது.
இது குறித்து யுவராஜ் இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், நான் அன்றைய தினம் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்தவுடன், ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை என்னில் நேரில் வந்து சந்தித்தார்.
ஏனெனில், அவர் தான் அப்போதைய மேட் ரெப்ரியாக இருந்தார். எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை ஏறக்குறைய முடித்துவிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறினார்.
நான் உடனே, தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. எனது ஓவரில் கூட 5 சிக்ஸர்கள் பறந்துள்ளது. எனவே இந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். அதுமட்டுமின்றி, நான் போட்டி முடிந்தவுடன், பிராட்டிடம், நீ இங்கிலாந்தின் எதிர்காலமாய் இருப்பாய். நீ நிச்சயம் பல சாதனைகளை படைக்கப் போகிறாய் என்று எழுதிக் கொடுத்தேன்.
அதேபோல் இன்று அவர் எட்டியிருக்கும் உயரத்தைப் பாருங்கள். இங்கிலாந்தில் 500-க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றி தவிர்க்க முடியாத உருவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.