விவோவின் பட்ஜெட் இணக்கமான Y1s மற்றும் Y12s ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.500 விலை உயர்ந்துள்ளன. அவை இப்போது முறையே ரூ.8,490 மற்றும் ரூ.10,490 விலைகளில் கிடைக்கின்றன.
நினைவுகூர, விவோ Y1s இந்தியாவில் ரூ.7,990 விலையிலும், விவோ Y12s ரூ.9,990 விலையிலும் இந்தியாவில் அறிமுகம் ஆனது.
தனியே, விவோ Y1s போன் 3 ஜிபி RAM / 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.
அவற்றின் விவரக்குறிப்புகளைப் பொருத்தவரை, விவோ Y1s மற்றும் Y12s ஒரு முக்கிய கீழ் பெசல் கொண்ட வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
விவோ Y1s மாடல் 19:9 என்ற திரை விகிதத்துடன் 6.22 அங்குல HD+ (720×1520 பிக்சல்கள்) IPS LCD திரையைக் கொண்டுள்ளது, பிந்தைய விவோ Y12s மாடல் 6.51 அங்குல HD+ (720×1600 பிக்சல்கள்) IPS LCD டிஸ்ப்ளேவை 20: 9 என்ற விகிதத்துடன் கொண்டுள்ளது.
விவோ Y12s போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.
விவோ Y1s ஒரு 13 MP (f/ 2.2) பின்புற கேமரா மற்றும் 5 MP (f/1.8) முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டுள்ளது. Y12s மாடலில் இரட்டை பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, இதில் 13MP (f / 2.2) பிரதான சென்சார் மற்றும் 2MP (f / 2.4) ஆழ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், இது 8MP (f / 1.8) செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.
விவோ Y1s மீடியா டெக் ஹீலியோ P35 செயலி உடன் இயக்கப்படுகிறது, Y12s ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் உடன் இயக்கப்டுகிறது. அவை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜைக் கொண்டிருக்கும்.
உட்புறத்தில், Y1s 4,030 mAh பேட்டரியைக் கொண்டுள்ளன, Y12s மாடலில் 5,000 mAh பேட்டரி உள்ளது.
இந்த சாதனங்கள் WiFi, புளூடூத் 5.0, GPS மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்டுக்கான ஆதரவை வழங்குகின்றன.
இந்த திருத்தத்தைத் தொடர்ந்து, விவோ Y1s விலை 2 ஜிபி / 32 ஜிபி மாடலுக்கு ரூ.ரூ.8,490 ஆகவும், 3 ஜிபி / 32 ஜிபி வேரியண்டிற்கு ரூ.9,490 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Y12s மாடலின் 3 ஜிபி / 32 ஜிபி மாடலுக்கான விலை 10,490 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் வழியாக கைபேசிகள் வாங்குவதற்கு கிடைக்கின்றன.