Loading...
வடக்கு மாகாணத்துக்குரிய சர்வதேச கிரிக்கட் மைதானம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ளது.
அதற்கான நிர்மாணப் பணிகள் இந்தவருடம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது வடமாகாணத்தின் முக்கிய தேவையாக இருந்து வந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படுமென்று தெரிவித்தார்.
Loading...
அவரின் ஆலோசனைக்கமைய, 2017ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிரிக்கட் மைதானம் அமைப்பதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டளவில் குறித்த பணிகளை நிறைவுசெய்து மைதானத்தை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.
Loading...