மைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக விண்டோஸ் 10 எனும் இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.
இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.
இவ்வாறிருக்கையில் இது தொடர்பாக மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி குறித்த புதிய பதிப்பானது 2017ம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும் Beam Streaming எனும் புதிய வசதி இவ் இயங்குதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Beam Streaming எனப்படுவது நேரடி ஒளிபரப்பின் அடுத்த தலைமுறையைக் குறிக்கின்றது.
இது அதிகமாக ஹேம் பிரியர்களுக்கே பயன்படக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக விண்டோஸ் 10 இயங்குதளத்தின் இயங்கு திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காரணம் இப் பதிப்பானது ஹேம் பிரியர்களை இலக்கு வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.