சர்வதேச சந்தையில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ரீதியிலான பண வீக்கம் எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட அதிகமாக உள்ளமையே இதற்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பண வீக்கம் அதிகரிக்கும் போது தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,876.87 டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறைவான அளவாக காணப்பட்டாலும் அமெரிக்காவிலும் பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதன் காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கமைய சர்வதேச சந்தையில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,950 டொலர் முதல் 1,975 டொலராக அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.