ஆர்.எஸ். புரம் பகுதியில் குரங்கு ஓன்றின் சேட்டை அதிகரித்து மாடி வீடுகளில் போடபட்டுள்ள காய்கறிகளை ருசி பார்த்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில் தன்னார்வலர்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாலையோரம் சுற்றித்திரியும் தெரு நாய் முதல் குரங்குகள் வரை உணவின்றி தவித்து வருகிறது.
இந்த நிலையில் கோவையில் உலா வரும் குரங்கு ஒன்று வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களில் புகுந்து சேட்டை செய்து வருகிறது. இது குறித்து சம்பந்தம் சாலை மக்கள் கூறுகையில், மக்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலும், மாடி தோட்டத்தில் விளைந்துள்ள காய்கறிகளை ருசி பார்பது, சமயத்தில் சமையல் அறையில் எட்டி பார்த்து கை நீட்டி உணவு கேட்பது வாடிக்கையாகி வருகிறது.
மக்கள் பயத்தில் விரட்டும் போது குரங்கு தனது குணத்தைகாட்டுகிறது. இதுஅச்சப்பட வைக்கிறது. மேலும் காய்கறி தோட்டங்களில் தாவி தாவி சேட்டை செய்வதால் சேதாரம் ஆகிறது.
ஊரடங்கு வேறு என்பதால் குரங்கின் வருகை வீடுகளில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்றும்குரங்கிடமிருந்து எங்களை வனத்துறையினர் காப்பற்ற வேண்டும் என தெரிவிக்கின்றனர்.