மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்கவும், சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீராக நோய்களை கட்டுப்படுத்தவும் இளநீர் உதவுகின்றது.
இளநீர் உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், குடல்புழுக்களை அழிக்கவும், முதியோர்களுக்கும், நோயாளிக்கும் சிறந்த ஊட்டச்சத்து பானமாகும், உடலில் நீர் சத்து குறையாமல் இருப்பதற்கு பயன்படுகின்றது.
இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம். இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது.
உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய் வதற்கு இளநீரை பருகுவது நல்லது. இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.
இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. புகையிலை மற்றும் மது போன்றவைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல்படுகிறது.
மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீரை தவறாமல் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகின்றது.
இரத்தத்தில் கலந்து நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கும், சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காமல், இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுகின்றது.