அமெரிக்காவில் வீடு புகுந்து மூன்று சகோதரிகளை சீரழித்த கொடூரனுக்கு 85 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டலாஸ் கவுண்டியை சேர்ந்தவர் ஆஸ்கர் கிங் (36). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்துள்ளான்.
பின்னர் அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்த ஆஸ்கர் கிங், படுக்கையறைக்குள் சென்றான். அங்கு படுத்திருந்த 10, 12, 13 வயதான மூன்று சகோதரிகளிடம், உங்கள் குடும்பத்தாரை கொன்றுவிடுவேன் என மிரட்டி சீரழித்துள்ளான்.
பின்னர் மூன்று சிறுமிகளும் கதறி அழுத நிலையில் கிங் அங்கிருந்து தப்பி சென்றான். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கிங்கை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த சூழலில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி கொடூரன் கிங்குக்கு 85 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கறிஞர் அலெக்ஸ் கூறுகையில், இது ஒரு சரியான தீர்ப்பு! கற்பனை செய்யமுடியாத கொடூரங்களை செய்த கிங் தனது வாழ்க்கையின் 85 ஆண்டுகளை சிறையில் அனுபவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.